Glossary

Glossary – Teachings of Great Sages and Gurus of India



Knowing
Knowing
  • நான்கு தன்மைகளிலும்

    ஒருவருடைய தன்மை (Varna), அவரது குணம், பண்புகள், தொழில், வேலைப்பயிற்சி முதலிய விசேஷ குணங்களைக் கொண்டு நிர்ணயிக்கப் படுகிறது. நான்கு தன்மைகள்: ஆன்மீகம், நாட்டை ஆளுவோர்/அரசர், வியாபாரிகள், மற்றும் இவற்றில் உள்படாத எல்லா தொழில் வல்லுனர்களும், உழைப்பாளிகளும் ஆவர். இந்த சமூக வகைப்பாட்டின் நோக்கம் என்னவென்றால், சமூகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் நல்வாழ்வும், ஆன்ம அபிவிருத்தியும், மன அமைதியும் கிடைப்பதின் மேல் கவனம் செலுத்துவது தான்.
  • நான்கு வாழ்க்கை நிலைகளிலும்

    நான்கு வாழ்க்கை நிலைகள் வாழிவின் படிமுறைகள். அவை : 1. பிரம்மச்சாரம் (இளவயதினர், மணமாகாதவர் - கல்வியிலும் நற்பண்புகளையும் கவனம் செலுத்தி கற்கும் வயதினர்). 2. இல்லாளர் (குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர் - சந்தோஷமான குடும்பத்தை நிலைநிறுத்தி, தமது குழந்தைகளுக்கும் சமூகத்துக்கும் நல்ல உதாரணமாக விளங்குபவர்.) 3. கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவவர் (தமது பொறுப்புகளையெல்லாம் முடித்துக்கொண்ட பின், தியானத்திலும் மன அமைதி தரும் நல்ல காரியங்களில் ஈடுபட்டு, இளவயதினருக்கு வழிகாட்டியாக இருப்பவர்). 4. துறவி, அல்லது குடும்ப வாழ்க்கையை விட்டு அகன்று வாழ்பவர் (உலகப் பொருட்களின் மீது அளவுக்கு மீறிய பிணிப்பை விட்டு விட்டு, ஆன்மீகத்தில் விமோசனம் ஒன்றையே விரும்பி ஈடுபடுபவர்.)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓